Thuppakki full movie

சத்யராஜ் மகள் நடிகையானார்

width="200"

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நடிகையானார். சத்யராஜ் மகன் சிபிராஜ் ஏற்கனவே நடிகராகி பல படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா சினிமாவுக்கு வராமல் சமூகசேவை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தொழிலாளர் நல அமைப்பில் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

திவ்யா முதல் முறையாக குழந்தை தொழிலாளர்கள் பற்றிய டாகுமென்டரி படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் கெங்கனாவை அணுகினார். இவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்துள்ளனர். படத்தை சிபிராஜ் பார்த்து திவ்யா நடிப்பை பாராட்டினாராம். 'கேன்ஸ்' படவிழாவுக்கும் இதனை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.




காஜல் அகர்வாலால் ரூ.2 கோடி நஷ்டம்: தயாரிப்பாளர் தவிப்பு

width="200"

காஜல் அகர்வால் தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்துக்கான பாடல் காட்சி யொன்றை சமீபத்தில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினர்.
 
1000 டான்சர்களுடன் மகேஷ் பாபுவும் காஜல்அகர்வாலும் ஆடுவது போன்று இப்பாடல் காட்சி எடுக்கப்பட்டது. படத்தில் தொடர்ந்து நடிப்பதற்காக காஜல் அகர்வாலிடம் மொத்தமாக 30 நாட்கள் கால்ஷீட் கேட்டனர். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.
 
தமிழில் விஜய் ஜோடியாக துப்பாக்கி, சூர்யா ஜோடியாக மாற்றான் படங்களில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இங்கு பிசியாக இருப்பதால் தெலுங்கு படத்துக்கு 30 நாட்கள் அவரால் ஒதுக்க முடியவில்லை.
 
இதனால் காஜல் அகர்வாலை மாற்றி விட்டு வேறு நாயகியை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு உள்ளனர். காஜல் அகர்வாலை வைத்து எடுத்து இருந்த பாடல் காட்சிக்கு தயாரிப்பாளர் ரூ.2 கோடி செலவிட்டு இருந்தார். அவரை தற்போது மாற்றுவதால் ரூ.2 கோடி நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார்.




கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு

width="200"

ஸ்ரேயாவின் 'சந்திரா' படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடிக்கிறார். இதற்காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயாவை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
 
வெளிநாட்டில் இருந்து வந்த தோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்றார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது முக்கிய சாலையில் கார் பஞ்சராகி நின்றது.
 
இதனால் கார் பின்னால் வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. தவித்து போன ஸ்ரேயா உடனடியாக அவரது தந்தைக்கு செல்போனில் தகவல் சொன்னார். அவர் வருவதற்கு முன்னால் நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்த பயணிகள் இறங்கி வந்து ஸ்ரேயாவை முற்றுகையிட்டனர். சிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இன்னும் சிலர் ஆவேசமாக திட்டி தீர்த்தனர்.
 
அப்போது தந்தை போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். ஸ்ரேயாவை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா.




நடிகை ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது: சினிமாவுக்காக பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தனர்

width="200"

கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பெண் திருமணமாகி கருவுற்ற காலம் முதல் பிரசவமாகும் வரை உள்ள நிகழ்வுகளை இயற்கையாக படமாக்க முடிவு செய்தார்.
 
அதற்காக கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை ஸ்வேதா மேனன் திருமணமாகி கருவுற்றிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் ஸ்வேதா மேனனையும், அவரது கணவர் ஸ்ரீவல்சனையும் சந்தித்து பேசினார்.
 
தனது சினிமா பற்றியும் அதில் ஸ்வேதா மேனனை கர்ப்பிணியாக நடிக்க வைக்கவும் பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு கணவனும்-மனைவியும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தனர்.
 
அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. கர்ப்ப காலத்தில் நடைபெறும் அனைத்து சம்பிரதாய சடங்குகளும் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்வேதா மேனன் கடந்த வாரம் மும்பையில் உள்ள நானாவதி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது பிரசவத்துக்காக தனி அறை தயாரானது. அங்கு 3 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
 
சுகப்பிரசவத்துக்கு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடுகள் தயாரானது. நேற்று மாலை 5 மணி அளவில் ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனே டைரக்டர் பிளஸ்சி, கேமரா மேன் ஜேக்கப், உதவி கேமிரா மேன் பாலு மற்றும் டாக்டர்கள், நர்சுகள் பிரசவ அறைக்கு சென்றனர்.
 
20 நிமிடம் பிரசவ வலியால் துடித்த ஸ்வேதா மேனனுக்கு 5.27 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. உத்ராடம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ காட்சிகள் அனைத்தையும் படப்பிடிப்பு குழுவினர் படமாக்கினர்.
 
பிரசவம் முடிந்ததும் நடிகை ஸ்வேதா மேனன் நிருபர்களிடம் கூறும் போது பிரசவ காலம் என்பது பெண்களுக்கு இனிமையான காலம். இது பெண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. இதில் பெரும் பங்கு ஆண்களுக்கும் உண்டு. அதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவே இதற்கு சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது என்றார்.




தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல்

width="200"



தமன்னா தெலுங்கில் பவன்கல்யான் ஜோடியாக 'கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா டி.வி. கேமராமேன் வேடத்திலும், பவன்கல்யான் டி.வி. நிருபர் கேரக்டரிலும் வருகின்றனர். பூரிஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அக்டோபரில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சி படங்கள் இண்டர்நெட்டில் பரவி உள்ளன. இதற்கிடையில் 'கேமரா மேன் கங்கா' படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனய்யா மீது இயக்குனர் பூரிஜெகன்னாத் தெலுங்கு இயக்குனர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தை தயாரிப்பாளர் தரமறுக்கிறார் என புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சங்கம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.




நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா?

width="200"

நடிகர் சந்தானம் முன்னணி காமெடியராக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்கள் போட்டி போட்டு இவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.
 
வடிவேலு ஒதுங்கியதால் அவர் இடத்தை வலுவாக பிடித்துள்ளார். தற்போது 'சிங்கம்-2', 'அமளிதுமளி', 'பூலோகம்', 'ஐ', 'வாலு', 'சேட்டை', 'மதகஜராஜா', 'என்றென்றும் புன்னகை' உள்பட 12 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
 
எந்த நடிகரும் இவ்வளவு படங்களில் நடிக்கவில்லை. மார்க்கெட் உயர்ந்ததால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளார். ஒருநாள் சம்பளமாக ரூ10 லட்சம் வேண்டும். குறைந்தது ஒரு படத்தில் 20 நாட்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று புது நிபந்தனை விதித்துள்ளாராம்.
 
இதன் மூலம் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார். 5 நாட்கள், 3 நாட்கள் நடித்து தரும்படி சில இயக்குனர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்கின்றனர். அவற்றில் நடிக்க மறுக்கிறாராம்.
 
20 நாட்கள் வேண்டுமானால் நடிக்கிறேன். அதற்கு குறைவான நாட்களில் நடிக்க முடியாது என்கிறாராம். 20 நாட்களுக்கும் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம் என்ற வகையில் ரூ.2 கோடி எங்களால் எப்படி தரமுடியும். சிறுபட்ஜெட் படங்களுக்கு அவ்வளவு தொகை தருவதற்கு சாத்தியம் இல்லை என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தானம் மேல் புகார் சொல்கிறார்கள். அதைப்பற்றி சந்தானம் கவலைப்படவில்லை. மார்க்கெட் இருப்பதால் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India